Home நாடு நஜிப்பை எச்சரிக்க காவல்துறையின் டுவிட்டரை ஹேக் செய்த ஹேக்கர்கள்!

நஜிப்பை எச்சரிக்க காவல்துறையின் டுவிட்டரை ஹேக் செய்த ஹேக்கர்கள்!

533
0
SHARE
Ad

twitterகோலாலம்பூர், ஜூலை 15 – மலேசிய காவல்துறைக்குச் சொந்தமான டுவிட்டர் கணக்கையும், பேஸ்புக் கணக்கையும் ஹேக் செய்துள்ள ஹேக்கர்கள், அதில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பை எச்சரித்தும், டாக்டர் மகாதீரை ஆதரித்தும் பதிவுகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

மலேசிய காவல்துறையின் டுவிட்டர் கணக்கான @PDRMsia-ல் சமீபத்தில் வெளியான பதிவில், “நஜிப் பதவி விலகும் வரை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், இந்த பதிவு இடம்பெற்ற அடுத்த ஒரு மணி நேரத்தில், “நாங்கள் அமைச்சர் ஒருவரை எச்சரிக்கிறோம். அவர் தான் நஜிப்பிற்கு பின்புலமாக இருக்கிறார். உங்கள் சகோதரை பாதுகாக்காதீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இங்கு அவர்கள் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசேனை குறிப்பிடுகின்றனர் என்பது தெரியவருகிறது. ஏனெனில் அவர் தான் பிரதமர் நஜிப்பின் நெருங்கிய உறவினர் ஆவார். அதேபோல் ஹேக்கர்கள் காவல்துறையின் கணக்கில், “நஜிப் ரசாக்..உங்களுக்காக நாங்கள் வருகிறோம்” என்றும் குறிப்பிட்டுள்ளனர். பேஸ்புக் கணக்கில் முன்னாள் பிரதமர் மகாதீர் வாழ்க என்றும் பதிவு செய்துள்ளனர்.

#TamilSchoolmychoice

காவல் துறையின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக தேசிய காவல்துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் கூறுகையில், “எங்கள் குழு இது தொடர்பாக ஏற்கனவே விசாரணையில் இறங்கி உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.