Home நாடு லோ யாட் மோதல்: ‘அலி டிஞ்சு’ கைது

லோ யாட் மோதல்: ‘அலி டிஞ்சு’ கைது

628
0
SHARE
Ad

Ali Tinjuகோலாலம்பூர், ஜூலை 15 – லோ யாட் வணிக வளாகத்திற்கு வெளியே ஏற்பட்ட கலவரச் சம்பவம் தொடர்பில் மலேசிய ஆயுதப்படை முன்னாள் வீரர்கள் (Malaysian Armed Forces Veterans Association) சங்கத்தின் தலைவர் முகமட் அலி பெஹரூம் கைது செய்யப்பட்டுள்ளார்.கலவரத்தை தூண்டியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

‘அலி டிஞ்சு’ என்று பரவலாக குறிப்பிடப்படும் முகமட் அலி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, லோ யாட் வணிக வளாகத்திற்கு வெளியே கூடியிருந்தவர்கள் முன்பு உரை நிகழ்த்தும் காணொளிக் காட்சி வெளியானது. அவரது உரைக்குப் பிறகே அம்மோதல் கலவரமாக மாறியதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2012-ம் ஆண்டு பெர்சே பேரணிக்கு பிறகு முன்னாள் வழக்கறிஞர் மன்றத் (பார் கவுன்சில்) தலைவர் அம்பிபா ஸ்ரீனிவாசன் வீட்டிற்கு வெளியே நடைபெற்ற (butt exercise protest) போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்களில் முகமட் அலியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டதை புக்கிட் அமான் உறுதி செய்துள்ளது.
லோ யாட் வணிக வளாகத்திற்கு வெளியே ஏற்பட்ட கலவரச் சம்பவம் தொடர்பில் கடந்த 2 நாட்களில் ஏற்கெனவே 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கலவரச் சம்பவத்தையடுத்து, இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாக செயல்படுபவர்கள் மீது தேச நிந்தனைச் சட்டம் பாயும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் எச்சரித்துள்ளார்.