Home கலை உலகம் தன் இசையால் என் வாழ்வுக்குச் செறிவூட்டியவர் எம்.எஸ்.வி – கமல்ஹாசன் உருக்கம்

தன் இசையால் என் வாழ்வுக்குச் செறிவூட்டியவர் எம்.எஸ்.வி – கமல்ஹாசன் உருக்கம்

514
0
SHARE
Ad

ms2-600x300சென்னை, ஜூலை 16- காலத்தால் அழிக்க முடியாத பல்லாயிரக்கணக்கான இனிய பாடல்களைத் தந்து, திரையுலக வரலாற்றில் நீங்காத இடம்பிடித்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவுக்குக் கமல்ஹாசன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

“எம்.எஸ்.வி. அவர்கள் பிரிக்க முடியாத வகையில் தமிழ்த் திரையுலக வரலாற்றோடு ஒன்றிவிட்டவர்.

தமிழ் மற்றும் தென்னிந்தியக் கலாசாரச் சித்தரிப்பின் அங்கம் அவர். இரசிகர்கள் அவரின் இசையுடன் தங்கள் வாழ்வின் இனிமையான பக்கங்களையும் திரும்பிப் பார்ப்பார்கள். இன்றைய தலைமுறைகளாலும் எம்.எஸ்.வி. இரசிக்கப்படுகிறார்.

#TamilSchoolmychoice

தன் புகழையும் பெருமையையும் பெரிதுபடுத்தாமல், பிற கலைஞர்களை வயது வித்தியாசம் பார்க்காமல் அவர் அடிக்கடி புகழ்வதுண்டு.

அவரது உடலை மட்டுமே நாம் இழந்திருக்கிறோம். அவரது இசை எப்போதும் நம்மோடிருக்கும். தன் இசையால் என் வாழ்வுக்குச் செறிவூட்டிய அவருக்கு என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்” எனத் தன் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.