Home இந்தியா டில்லியில் ‘அம்மா’ உணவகம் – முதல்வர் கெஜ்ரிவால் யோசனை!

டில்லியில் ‘அம்மா’ உணவகம் – முதல்வர் கெஜ்ரிவால் யோசனை!

1151
0
SHARE
Ad

ammaபுது டெல்லி, ஜூலை 17 – அதிமுக ஆட்சியின் மிகப் பெரும் சாதனையாகக் கருதப்படும் ‘அம்மா’ உணவகங்கள் போன்று, டெல்லியிலும் ஆரம்பிக்க கெஜ்ரிவால் முயற்சிப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில், அதிமுக ஆட்சிக்கு வந்த சமயத்தில் விலைவாசி கடுமையான உயர்வில் இருந்தது. ஏழை எளிய மக்கள் மிகப் பெரும் சிரமத்திற்கு ஆளான தருணத்தில், முதல்வர் ஜெயலலிதா, ஐந்து ரூபாய்க்குள் இட்லி, தோசை போன்ற காலை உணவுகளையும், சாத வகைகளையும் ‘அம்மா’ உணவகங்கள் மூலம் வழங்க ஏற்பாடு செய்தார்.

இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்றனர். பல சமயங்களில் அதிமுகவின் சொதப்பலான ஆட்சி முறை, இது போன்ற திட்டங்களால் உயர்த்திப் பிடிக்கப்பட்டது. இந்நிலையில், இதைக் கவனித்த அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியிலும் இந்த வழிமுறையை பின்பற்றி மக்கள் செல்வாக்கை பெறும் முயற்சியில் இறங்கி உள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த உணவகங்களுக்கு ‘ஆம்ஆத்மி உணவகங்கள்’ என பெயரிடப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆம் ஆத்மி வட்டாரங்கள் கூறுகையில், “டில்லியில் உள்ள இருபது லட்சம் ஏழை மக்கள், இந்த திட்டம் மூலம் பயன்பெற வாய்ப்புள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்த உணவகங்கள் திறக்கப்படும்” என்று தெரிவித்துள்ளன.