Home இந்தியா முன்னாள் மாணவர் சுந்தர் பிச்சையை கௌரவிக்கக் காத்திருக்கும் ஐஐடி!

முன்னாள் மாணவர் சுந்தர் பிச்சையை கௌரவிக்கக் காத்திருக்கும் ஐஐடி!

598
0
SHARE
Ad

pitchai1கரக்பூர், ஜூலை 17 – இந்தியாவின் மிக முக்கிய கல்வி நிறுவனமான ஐஐடி கரக்பூர், அடுத்தமாதம், 11 சிறந்த முன்னாள் மாணவர்களை கௌரவிக்க இருக்கிறது. அந்த 11 பேருக்கும் தலைசிறந்த முன்னாள் மாணவர் விருதும் வழங்க முடிவு செய்துள்ளது. இதில் மிக சுவாரசியமான தகவல் என்னவென்றால், விருது வாங்க இருக்கும் 11 பேரில், கூகுள் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் சுந்தர் பிச்சையும் ஒருவர் என்பது தான்.

கடந்த 1993-ம் ஆண்டு, சுந்தர் பிச்சை ஐஐடி கரக்பூரில் தான் தனது பொறியியல் படிப்பை நிறைவு செய்தார். அதன் பிறகு, கடந்த 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த அவர், படிப்படியாக உயர்ந்து அண்டிரொய்டு பிரிவின் தலைவராக பொறுப்பேற்றார். அதன் பிறகு சுந்தரின் ஆற்றலும், திறமையும் அவரை கூகுள் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் பதவிக்கு உயர்த்தியது.

சுந்தர் பிச்சையை தவிர்த்து, விருது வாங்க இருக்கும் 11 பேரில் உலகப் புகழ் பெற்ற பொன்சாய் கலைஞர் பீட்டர் சேன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் கிறிஸ்டோபர் போன்றோரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.