Home உலகம் எம்எச் 17 விபத்து: கண்ணீர் அஞ்சலி செலுத்திய உக்ரைன் கிராமவாசிகள்!

எம்எச் 17 விபத்து: கண்ணீர் அஞ்சலி செலுத்திய உக்ரைன் கிராமவாசிகள்!

760
0
SHARE
Ad

MH17ஹராபோவே, ஜூலை 18 – எம்எச் 17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த கிராமவாசிகள், நேற்று விபத்தில் பலியான 298 பேருக்கும் இரங்கல் கூட்டம் நடத்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

கடந்த ஆண்டு, ஜூலை 17-ம் தேதி தான், எம்எச் 17 விமானம் உக்ரைன் பகுதியில் ரஷ்யப் போராளிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. 298 பேர் பலியான அந்த சம்பவம் பற்றி இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த கிராமவாசிகள், ஒரு தேவாலயத்தில் கூடி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

அவர்கள் குறிப்பிட்ட அந்த பகுதியில் நினைவுச் சின்னம் ஒன்றை நிறுவி உள்ளனர். நேற்று, பலர் அந்த நினைவுச் சின்னத்தில் பூக்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். தேவாலயத்தில் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனையும் செய்யப்பட்டது.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, சமீபத்தில் டச்சு பாதுகாப்பு ஆணையம் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யப் போராளிகள் தான் காரணம் என்று ஆய்வறிக்கை தயாரித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த ஆவணங்களின் இறுதி வடிவம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.