Home கலை உலகம் பாகுபலியின் வசூலைக் கண்டு மிரண்ட சல்மான்கான்!

பாகுபலியின் வசூலைக் கண்டு மிரண்ட சல்மான்கான்!

546
0
SHARE
Ad

unnamed-414-720x480மும்பை, ஜூலை 18- இந்தியச் சினிமாவைப் பொருத்தவரை, பொதுவாக இந்திய அளவிலும் உலக அளவிலும் வசூலை வாரிக் குவிப்பவை இந்திப்படங்கள் தான்.

ஆனால், 250 கோடி பட்ஜெட்டில் உருவான ஒரு தெலுங்குப் படம், வெளியான ஏழே நாளில், 300 கோடி ரூபாய் வசூலை நெருங்கிக் கொண்டிருப்பது எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுபற்றிப் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் மிகவும் வியப்புடன், “யாரேனும் வந்து இந்தச் சாதனையை முறியடிக்கும் வரை, இப்போதைக்கு இந்தித் திரைப்படங்களால் இந்த வசூலைப் பெறமுடியும் என்று தோன்றவில்லை. பாகுபலியின் வசூல் விவரங்கள் அச்சுறுத்துகின்றன. பாகுபலி மிக அருமையான படம். ஆனால் பல பாலிவுட் படங்கள் அதிக வசூல் செய்ததாலேயே, பாகுபலியால் இந்தளவு வசூலைப் பெறமுடிந்தது” என்றார்.

#TamilSchoolmychoice

சல்மான்கானின் பல படங்கள்  வெளியான ஆறேழு நாட்களில் 150, 200 கோடி ரூபாய் வசூலைத் தான் பெற்றுள்ளன. ஆனால் பாகுபலி வெளியான ஆறேழு நாட்களில் 300 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது குறிப்பிடத்தக்கது.