Home நாடு ஜஸ்டோவை சந்தித்ததாக பகிரங்கமாக குற்றம் சாட்டத் தயாரா? டோனி புவா சவால்!

ஜஸ்டோவை சந்தித்ததாக பகிரங்கமாக குற்றம் சாட்டத் தயாரா? டோனி புவா சவால்!

761
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 19 – பெட்ரோ சவுதி நிறுவனத்தைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி சேவியர் அண்ட்ரே ஜஸ்டோவை (படம்) தாம் சந்தித்துப் பேசியதாக தேசிய முன்னணி தலைவர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்ட தயாரா? என டோனி புவா சவால் விடுத்துள்ளார்.

Xavier Andre Justoபெட்டாலிங் ஜெயா உத்தாரா தொகுதியின் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினரான அவர் தனது முகநூல் பக்கத்தில் நேற்று சனிக்கிழமையன்று இது தொடர்பாக பதிவிட்டுள்ளார்.

ஐஸ்டோவை எதிர்க்கட்சித் பிரமுகர்கள் சிலர் சிங்கப்பூரில் சந்தித்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பில், அப்பிரமுகர்கள் உரிய விளக்கமளிக்க வேண்டுமென தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் ஷாபெரி வலியுறுத்தியதாக அண்மையில் செய்தி வெளியானது. அதற்குப் பதிலளிக்கும் விதமாகவே டோனி புவா (படம்) இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

Tony Phuaபெட்ரோ சவுதி நிறுவனத்தின் முன்னாள் செயலரான, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஜஸ்டோ, தனது நிறுவனத்தை மிரட்டிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஜூன் 22ஆம் தேதி தாய்லாந்தில் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக அவர் தன்னிடம் உள்ள சில முக்கியமான ஆவணங்களை ஒப்படைப்பது குறித்து மலேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலருடனும், ஊடக உரிமையாளர் ஒருவருடனும் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை எல்லாம் ஜஸ்டோ சிங்கப்பூரில் சந்தித்துப் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், ஜஸ்டோவை தாம் சிங்கப்பூரில் சந்தித்துப் பேசியதாக தேசிய முன்னணி அமைச்சர் யாரேனும் பகிரங்கமாக குற்றம்சாட்ட தயாரா? என டோனி புவா கேட்டுள்ளார்.