சென்னை,ஜூலை20- கடலில் விழுந்து தேடி எடுக்கப்பட்ட டோர்னியர் விமானத்தின் கருப்புப் பெட்டியை ஆய்வு செய்வது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கடலுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்ட டோர்னியர் விமானத்தின் கருப்புப் பெட்டி சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமானக் கட்டுப்பாட்டு மையத்தில் தான் இன்னமும் இருக்கிறது.
இதனால், விபத்துக்கான மர்மம் விலகுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
டோர்னியர் விமானத்தின் கருப்புப் பெட்டியில் சேதம் ஏற்பட்டிருப்பதால், அதில் இருக்கும் தகவல்களை எடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
சேதமடைந்த கருப்புப் பெட்டியில் இருந்து தகவல்களை எடுப்பதற்கான தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை. அதைச் சரிசெய்து தகவல் சேகரிப்பதற்காகக் கனடா விஞ்ஞானிகள் வருகை தர இருப்பதாகக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இன்னும் அதுகுறித்து உறுதி செய்யப்படவில்லை.