Home கலை உலகம் இப்ராஹிம் ராவுத்தர் உடலுக்கு விஜயகாந்த்,சத்யராஜ் முதலான திரையுலகினர் அஞ்சலி

இப்ராஹிம் ராவுத்தர் உடலுக்கு விஜயகாந்த்,சத்யராஜ் முதலான திரையுலகினர் அஞ்சலி

714
0
SHARE
Ad

ipசென்னை, ஜூலை 22- நடிகர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும், திரைப்பட தயாரிப்பாளரான இப்ராஹிம் ராவுத்தர்  கடந்த ஒருமாத காலமாக இருதயம் மற்றும் சிறுநீரகப் பாதிப்பு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை சுமார் 11 மணியளவில் காலமானார்.

அவரது உடல் சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள ’ராவுத்தர் பிலிம்ஸ்’ அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

நாளை உடல் அடக்கம் செய்யப்படும் எனக் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

அவரது உடலுக்கு விஜயகாந்த் குடும்பத்தினருடன் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். நடிகர் சத்யராஜ், மன்சூர் அலிகான், இயக்குநர் விக்ரமன், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் பேரரசு முதலான திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.

ip2(தனது ஆருயிர் நண்பருக்கு விஜயகாந்த் அஞ்சலி செலுத்துகிறார். அருகில் அவரது மனைவி பிரேமலதா அஞ்சலி செலுத்தும் காட்சி)

ip3                                                        (நடிகர் சத்யராஜ் அஞ்சலி செலுத்தும் காட்சி)

ip4                                     (சத்யராஜ்,விஜயகாந்தை அணைத்து ஆறுதல் சொல்லும் காட்சி)

ip5                                     (நடிகர் மன்சூர் அலிகான் விஜயகாந்திற்கு ஆறுதல் சொல்கிறார்)

ip6(சோகமே உருவாக அமர்ந்திருக்கும் நடிகர் ரமேஷ் கண்ணா, இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் விக்ரமன்,எல்.கே.சுதீஷ் மற்றும் இயக்குநர் பேரரசு)