Home இந்தியா கூகுளின் முட்டாள் பிரதமர்கள் பட்டியலில் நரேந்திர மோடி!  

கூகுளின் முட்டாள் பிரதமர்கள் பட்டியலில் நரேந்திர மோடி!  

3293
0
SHARE
Ad

modi-new-600மும்பை, ஜூலை 24- கூகுளின் தேடுதல் பகுதியில் இடம்பெற்றுள்ள முட்டாள் பிரதமர்கள் பட்டியலில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் படமும் இடம் பெற்றுள்ளதால் கூகுள் நிறுவனத்திற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

இணையத்தில் தேவையான தகவல்களையும் புகைப்படங்களையும் தேடுவதற்கு மிகவும் உதவியாக இருப்பது கூகுள் இணையதளம் ஆகும்.

இதன் ஆங்கிலத் தேடல் பகுதியில் உலகின் தலை சிறந்த முட்டாள் பிரதமர்கள் வரிசையில், நரேந்திர மோடியின் படம் பலமுறை இடம் பெற்றுள்ளதாகத் தற்போது சர்ச்சை கிளம்பியுள்ளது.

#TamilSchoolmychoice

மோடியை முட்டாள் எனக் காட்டுவதைக் கண்டு இந்தியர்கள் கொதித்துப் போயுள்ளனர். மேலும்,முட்டாள்கள் வரிசையில் மோடி அதிக முறை இடம் பெற்றிருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவதால், இந்தியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

moகூகுள் நிறுவனம் மோடியை அவமானப்படுத்துவது இது முதல்முறையல்ல. இதற்கு முன், சென்ற மாதம்  ‘இந்தியாவின் முதல் 10 குற்றவாளிகள்’ என்ற புகைப்படப் பிரிவுப் பகுதியில் பிரதமர் மோடியின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது.

இது இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, கூகுள் நிறுவனம், “இது எங்களுடைய சொந்தக் கருத்து அல்ல” என்று விளக்கமளித்து, அதற்காக மன்னிப்புக் கோரியது.ஆனாலும்,அந்தப்  பட்டியலில் இருந்து மோடியின் படத்தை இன்னமும் நீக்கவில்லை.

இந்நிலையில், மீண்டும் அதேபோல் முட்டாள் பட்டியலில் மோடியை இடம்பெறச் செய்திருப்பது கண்டனத்திற்குரியதாகும்.

இந்தப் பட்டியலில், பிரதமர் மோடியோடு சேர்த்து, இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கேமரூன், ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட், மற்றும் சிங்கப்பூர் முதல் பிரதமரான லீ குவான் யீவ் போன்ற ஒரு சில முன்னாள் பிரதமர்கள் படமும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.