Home இந்தியா யாக்கோப் மேமன் மீதான சர்ச்சைக்குரிய கருத்தை சல்மான் கான் மீட்டுக் கொண்டார்

யாக்கோப் மேமன் மீதான சர்ச்சைக்குரிய கருத்தை சல்மான் கான் மீட்டுக் கொண்டார்

632
0
SHARE
Ad

மும்பாய், ஜூலை 26 – 1993 மும்பாய் வெடிகுண்டு வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் யாக்கோப் மேமன் அப்பாவி என்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு அவரைத் தற்காத்த, பாலிவுட்டின் பிரபல நடிகர் சல்மான் கான் இன்று அந்தக் கருத்தை மீட்டுக் கொண்டதோடு, மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

salman-khanசல்மான் கானின் கருத்துக்கு அரசியல் கட்சிகளிடமிருந்தும், நட்பு ஊடகப் பயனர்களிடத்திலும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பின.

அதனைத் தொடர்ந்து விளக்கமளித்த சல்மான் “நான் யாக்கோப் மேமன் குற்றமற்றவர் என்று கூற முற்படவில்லை. நமது நாட்டின் நீதிபரிபாலன நடைமுறைகளின்மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

யாக்கோப் மேமனுக்குப் (படம்) பதிலாக, தற்போது பாகிஸ்தானில் இருப்பதாக நம்பப்படும் பயங்கரவாதக் கும்பலின் தலைவன் டைகர் மேமன்தான் தூக்கிலிடப்பட வேண்டும் என்று முன்னதாக சல்மான் டுவிட்டரின் வழி கூறியிருந்தார்.

15-1436940008-yakub-memonதனது டுவிட்டரின் வழி டைகர் மேமன் பாகிஸ்தானில் இருக்கின்றானா என்பதை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப் உறுதிப்படுத்த வேண்டுமென்றும் சல்மான் கேட்டுக் கொண்டிருந்தார்.

“எனது தந்தை என்னை அழைத்து எனது டுவிட்டர் கருத்துக்கள் தவறுதலான புரிந்துணர்வுகளைத் தோற்றுவித்துவிடும் என்பதால் அவற்றை மீட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறினார். எனவே, எனது கருத்துக்களை நான் மீட்டுக் கொள்கின்றேன்” என சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

“எந்தவித நோக்கமும் இன்றி நான் கூறிய எனது கருத்துகளால் நான் தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன்” என்றும் சல்மான் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், டைகர் மேமன் அவரது குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்திய சல்மான் “அவருக்கு பதிலாக யாக்கோப் மேமன் தூக்கிலிடப்படக்கூடாது என்பதுதான் தான் கூற வந்த கருத்து” என்றும் மீண்டும் கூறியுள்ளார்.

“மும்பாய் வெடிகுண்டுத் தாக்குதலில் பல உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டன. ஆனால் நான் மீண்டும் மீண்டும் சொல்வது என்னவென்றால், நிரபராதியான ஒருவரின் உயிரிழப்பு அனைத்து மனித இனத்தின் உயிரிழப்புக்கும் சமமானதாகும்” என்றும் சல்மான் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.