Home இந்தியா டோர்னியர் விமானத்தின் கருப்புப் பெட்டி அமெரிக்காவிற்குக் கொண்டு செல்லப்பட்டது

டோர்னியர் விமானத்தின் கருப்புப் பெட்டி அமெரிக்காவிற்குக் கொண்டு செல்லப்பட்டது

678
0
SHARE
Ad

ccசென்னை, ஜூலை 27- கடலில் விழுந்து 33 நாட்களுக்குப் பின் கண்டெடுக்கப்பட்ட, இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான டோர்னியர் விமானத்தின் கருப்புப் பெட்டி அமெரிக்காவிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகக் கடலோரக் காவல்படையின் ஆணையர் சர்மா தெரிவித்துள்ளார்.

ஜூன் 8- ஆம் தேதி ஒத்திகைக்காகக் கிளம்பிய, இந்தியக் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான டோர்னியர் ரக விமானம், மூன்று விமானிகளுடன் திடீரென மாயமாய் மறைந்துவிட்டது.

ரேடார் கருவியின் கண்காணிப்பிலிருந்து மறைந்த சிதம்பரம், பிச்சாவரம் கடல் பகுதியில், கப்பல், ஹெலிகாப்டர், அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் போன்றவற்றால் தீவிரமாகத் தேடியும் 33 நாட்களுக்குப் பிறகே கருப்புப் பெட்டியையும் உடைந்த சில பகுதிகளையும் மீட்க முடிந்தது. பின்னர் தொடர்ந்து தேடிய போது மூன்று விமானிகளின் எலும்புகள் தான் கிடைத்தன.

#TamilSchoolmychoice

ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டதால், கருப்புப் பெட்டியின் தகவல்களைப் பெறுவதில் சிக்கல் நீடித்தது. கனடாவிலுள்ள நிபுணர்களைக் கொண்டு தகவல்களைச் சேகரிக்க ஆலோசிக்கப்பட்டது.

ஆனால், தற்போது அமெரிக்காவிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவிற்குக் கொண்டு செல்லப்பட்ட கருப்புப் பெட்டியிலிருந்து தகவல்களைச் சேகரிக்கும் பணி இன்று தொடங்கும் என்றும், அனைத்துத் தகவல்களையும் சேகரிக்க ஒரு வாரம் ஆகலாம் என்றும் ஐ.ஜி.சர்மா கூறியுள்ளார்.