Home இந்தியா பஞ்சாப்பில் சண்டை முடிந்தது: 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை!

பஞ்சாப்பில் சண்டை முடிந்தது: 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை!

586
0
SHARE
Ad

27-1437999678-army45566குர்தாஸ்பூர், ஜூலை 27- அதிகாலையில் இருந்து தீவிரவாதிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்து வந்த துப்பாக்கிச் சண்டை, 12 மணி நேரத்திற்குப் பின்பு மாலையில் முடிவுக்கு வந்தது. முடிவில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மூன்று பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பான அறிக்கை நாளை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் தாக்குதலைத் தொடர்ந்து தலைநகர் டெல்லி, மும்பை,கல்கத்தா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.