Home நாடு மொகிதின் காணொளி: ‘பொறுமையாக இருங்கள், நஜிப் விளக்கமளிப்பார்’ – அம்னோ உச்ச மன்ற உறுப்பினர்

மொகிதின் காணொளி: ‘பொறுமையாக இருங்கள், நஜிப் விளக்கமளிப்பார்’ – அம்னோ உச்ச மன்ற உறுப்பினர்

594
0
SHARE
Ad

unnamed (1)

கோலாலம்பூர், ஜூலை 30 – 2.6 பில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றத்தை நஜிப் ஒப்புக்கொண்டதாக, டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பேசும் சர்ச்சைக்குரிய காணொளிக்கு நிச்சயமாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதிலளிப்பார் என அம்னோ உச்ச மன்றம் உறுப்பினர் தாஜூடின் அப்துல் ரஹ்மான் மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளார்.

“இது ஒரு கடுமையான குற்றச்சாட்டு. நஜிப் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளமாட்டார் என்று நினைக்கிறேன். கண்டிப்பாக அவர் காதை மூடிக் கொள்ளமாட்டார். அது குறித்து விளக்கமளிப்பார். அதுவரை பொறுமையாக இருங்கள்” என்று தாஜுடின் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், “இந்தக் குற்றச்சாட்டு உண்மையில்லாத பட்சத்தில் அவர் அமைதியாக இருந்து தனது பெயரைக் கெடுத்துக் கொள்ள மாட்டார்” என்றும் தாஜுடின் குறிப்பிட்டுள்ளார்.

துணைப்பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அன்றைய இரவு, கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர், அம்னோ உச்சமன்ற முன்னாள் உறுப்பினர் காதிர் செய்க் பாடசீர் ஆகியோருடன் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் உரையாடுவது போல் காணொளி ஒன்று நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அக்காணொளியில் பேசியுள்ள மொகிதின், பிரதமர் நஜிப் துன் ரசாக் தனது வங்கிக் கணக்கிற்கு 2.6 பில்லியன் ரிங்கிட் (700 மில்லியன் அமெரிக்க டாலர்) பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதை ஒப்புக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.