Home இந்தியா மதுவிற்கு எதிராகப் பெண்கள் நூதனப் போராட்டம்!

மதுவிற்கு எதிராகப் பெண்கள் நூதனப் போராட்டம்!

521
0
SHARE
Ad

tasmac protest 3(2)சென்னை, ஆகஸ்டு 4- மதுக்கடைகளை மூட வலியுறுத்திப் பெண்களும் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

சென்னையில் சில பெண்கள் மதுபானக்கடையை முற்றுகையிட்டு மதுபானம் குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் சில பெண்கள் மதுபாட்டில்களைத் தாலியில் கட்டித் தொங்கவிட்டு, இந்த மதுபாட்டில்கள் எங்கள் தாலியை அறுக்கின்றன என்று முழக்கமிட்டனர்.

இதேபோல், நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமுக்கு மனிதம் அறக்கட்டளையைச் சேர்ந்த ஜலீனா சலீம் மதுபாட்டில்களை மாலையாக அணிந்து கொண்டு மனு கொடுக்க வந்தார்.

#TamilSchoolmychoice

இவ்வாறு பெண்கள் மதுவிற்கு எதிராக நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.