Home Featured கலையுலகம் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலைப் பாடிய பிரபல மலாய் பாடகி!

ஏ.ஆர்.ரஹ்மான் பாடலைப் பாடிய பிரபல மலாய் பாடகி!

799
0
SHARE
Ad

Datuk sitiகோலாலம்பூர், ஆகஸ்ட் 5 – மலேசியாவின் நம்பர் 1 பாடகியான டத்தோ சித்தி நூர்ஹாலிசா, ஆஸ்கார் விருது பெற்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளிவந்த தமிழ்ப் பாடல் ஒன்றைப் பாடி, தனது ரசிகர்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘மரியான்’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘நெஞ்சே எழு’ பாடலை மலேசிய இசையமைப்பாளர் ஜெய் வழிகாட்டுதலோடு டத்தோ சித்தி பாடியுள்ளார்.

அந்தக் காணொளி தற்போது நட்பு ஊடகங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகின்றது.

#TamilSchoolmychoice

அஸ்ட்ரோ உலகம் வெளியிட்டுள்ள தகவலின் படி,  தற்போது விண்மீன் எச்டி அலைவரிசையில் நடைபெற்று வரும் ‘அனைத்துலக சூப்பர் ஸ்டார் 2015’ பாடல் திறன் போட்டியின் விளம்பரத்திற்காக டத்தோ சித்தி அந்தப் பாடலைப் பாடியுள்ளார்.

இது குறித்து டத்தோ சித்தி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், “ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலைப் பாடுவதில் பெருமையடைகின்றேன். தமிழில் பாடுவது மிகவும் சவாலாக இருந்தது. ஆனால் நான் அதை மிகவும் விரும்புகின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், கனடா மற்றும் இந்தியா ஆகிய 5 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கு பெற்று வரும் ‘அனைத்துலக சூப்பர் ஸ்டார் 2015’ நிகழ்ச்சியின் மாபெரும் இறுதிச் சுற்று வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது

அஸ்ட்ரோ அவானி வெளியிட்டுள்ள அந்தக் காணொளியை இங்கே காணலாம்: