Home இந்தியா தண்டவாளம் வெள்ளத்தில் போனதால் ரயில் விபத்து: ரயில்வே அமைச்சர் விளக்கம்

தண்டவாளம் வெள்ளத்தில் போனதால் ரயில் விபத்து: ரயில்வே அமைச்சர் விளக்கம்

951
0
SHARE
Ad

suresh_prabhuபுதுடில்லி, ஆகஸ்ட் 5- வட மாநிலங்களில் கடந்த இரண்டு நாட்களாகக் கன மழை பெய்து வருவதால் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான ஊர்கள் தண்ணீரில் மிதக்கின்றன.

கன மழையின் காரணமாகத் தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதே மத்தியப் பிரதேசத்தில் நடந்த ரயில் விபத்திற்குக் காரணம் என மாநிலங்களவையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.