Home Featured நாடு ‘தொல்காப்பியக் கடலில் ஒரு துளி’ வெளியீட்டு விழா – அமைச்சர் சுப்ரா கலந்து சிறப்பிப்பார்!

‘தொல்காப்பியக் கடலில் ஒரு துளி’ வெளியீட்டு விழா – அமைச்சர் சுப்ரா கலந்து சிறப்பிப்பார்!

733
0
SHARE
Ad

Seeni Naina Mohdகோலாலம்பூர் – நாளை சனிக்கிழமை ஆகஸ்ட் 8-ம் தேதி, காலை 9.00 மணி முதல் 11.30 மணிவரை தலைநகர்  துன் சம்பந்தனார் மாளிகையின் சோமா அரங்கில், அமரர் இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களின் படைப்புகளின், மின்-பதிவுகள்  வெளியீட்டு விழா – ‘நல்லார்க்கினியர் நற்பதிவுகள்’ – எனும் பெயரில் – வெளியிடப்படும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அதே மண்டபத்தில், அவரது வானொலி உரைகள் அடங்கிய “தொல்காப்பியக் கடலில் ஒரு துளி” என்ற மின்பதிப்பு நூலின் வெளியீட்டு விழா நடைபெறுகின்றது.

Datuk-Seri-Dr-S.Subramaniamகாலை 11.30 மணி முதல் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சரும், மஇகா இடைக்காலத் தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் கலந்து கொண்டு சிறப்பிப்பார்.

இந்நூல் வெளியீடு குறித்து ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் பொன் கோகிலம் கருத்துரைத்தபோது, “நான்கு ஆண்டுகள் வானொலியில் ஒலிபரப்பப்பட்ட சீனி ஐயாவின் தொல்காப்பியம் பற்றிய உரை ‘தொல்காப்பியக் கடலில் ஒரு துளி’ என்ற நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. அந்த நூல் வெளியீட்டில் கிடைக்கும் தொகை முழுவதும் சீனி ஐயாவின் குடும்பத்தினருக்கு அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice