Home Featured உலகம் எம்எச்370: புதிய சிதைவுகளை ரியூனியன் கடற்கரையில் விமானம் மூலம் தேடும் பிரான்ஸ்!

எம்எச்370: புதிய சிதைவுகளை ரியூனியன் கடற்கரையில் விமானம் மூலம் தேடும் பிரான்ஸ்!

667
0
SHARE
Ad

MH370ரியூனியன்  – காணாமல் போன எம்எச் 370 விமானத்தின் மற்றொரு பாகம் ரியூனியன் கடற்கரைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் சிதைந்த பாகங்கள் ஏதும் காணப்படுகின்றதா என்பதைக் கண்டறிய பிரான்ஸ் அரசாங்கம் ஆகாயம் மார்க்கமாக விமானம் மூலம் தேடும் படலத்தைத் தொடங்கியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் இராணுவ விமானங்கள் இந்தத் தேடுதல் வேட்டையில் தற்போது இறங்கியுள்ளன.

ஏற்கனவே, மொரிஷியஸ் நாடும் விமானத்தின் சிதைந்த பாகங்களைத் தேடும் பணியில் இணைந்துள்ளது.

#TamilSchoolmychoice

மலேசியாவிலிருந்து நான்கு பேர் கொண்ட ஆய்வுக் குழுவினர் தற்போது ரியூனியன் தீவின் பாறைகளைக் கொண்ட நீண்ட கடற்கரையில் சிதைந்த பாகங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.