Home Featured தொழில் நுட்பம் டிம் குக்கின் பாதுகாப்பிற்காக ஏழு லட்சம் டாலர்களை செலவிடும் ஆப்பிள்!

டிம் குக்கின் பாதுகாப்பிற்காக ஏழு லட்சம் டாலர்களை செலவிடும் ஆப்பிள்!

750
0
SHARE
Ad

timcook-confகோலாலம்பூர், ஆகஸ்ட் 9 – ஆப்பிளின் தலைமை நிர்வாகி டிம் குக்கின், பாதுகாப்பிற்காக அந்நிறுவனம் ஆண்டுதோறும் சுமார் ஏழு லட்சம் டாலர்கள் செலவிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலக அளவில் அதிக இலாபம் ஈட்டும் நிறுவனமான ஆப்பிள், சமீபத்தில் அமெரிக்காவின் பாதுகாப்பு ஆணையத்திடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், டிம் குக்கின் பாதுகாப்பிற்காக ஆண்டுதோறும் 699,133 டாலர்களை செலவிடுவதாக குறிப்பிட்டுள்ளது.

எனினும், இந்த தொகை மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களை ஒப்பிடுகையில் சற்றே குறைவாகத்தான் இருக்கிறது. இது தொடர்பாக ஃபார்ச்சூன் செய்தி நிறுவனம், 2014-ம் ஆண்டில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசாஸிற்காக 1.6 மில்லியன் டாலர்களும், ஆரக்கிள் தலைவர் லாரி எலிசனின் பாதுகாப்பிற்காக 1.5 மில்லியன் டாலர்கள் செலவிடப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.