Home இந்தியா திருச்சியில் இருக்கும் சுத்தம், தலைநகர் சென்னையில் இல்லையாம்!

திருச்சியில் இருக்கும் சுத்தம், தலைநகர் சென்னையில் இல்லையாம்!

476
0
SHARE
Ad

trichy cityபுது டெல்லி, ஆகஸ்ட் 10 – பிரதமர் நரேந்திர மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டன் கீழ், நாடு முழுவதும் உள்ள நகரங்கள் அவற்றின் தூய்மையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மைசூர் இந்திய அளவில் மிகவும் துய்மையான நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தை திருச்சி மாநகராட்சி பெற்றுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்த பட்டியல், வெளியிடங்களில் மனிதக்கழிவுகள், திடக்கழிவு மேலாண்மை, குப்பைகளை அகற்றுதல் போன்றவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தலைநகரான சென்னை இந்த பட்டியலில் 61-வது இடத்தையே பிடித்துள்ளது. தமிழகத்தின் மற்ற முக்கிய நகரங்களான மதுரை மற்றும் கோவை முறையே 20, 196 இடங்களை பிடித்துள்ளன.

chennai central station longமத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் நேரடியாக ஆய்வில் ஈடுபட்டு, இந்த பட்டியலை தயாரித்துள்ளது. இந்தியா முழுவதும் ஒரு லட்சத்துக்கும்  அதிகமான மக்கள்தொகை கொண்ட 476  நகரங்களில், வெளியிடங்களில் மனிதக்கழிவுகள், திடக்கழிவு மேலாண்மை, சாக்கடைகள், குடிநீர் தரம், தொற்று நோய்கள் போன்ற பல அளவுகோள்களின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice