விமான நிறுத்துமிடங்கள் சரிவர பராமரிக்கபடாததே இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டது.
அப்போது சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தை, விசாரிக்க சிவில் விமான போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, விமான போக்குவரத்துத் துறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விமான பாதுகாப்பில் கட்டுப்பாட்டு அமைப்புகளின் பங்கும், பொறுப்பும் மிக அதிகம். அனைத்துலக விதிமுறைகளையும், பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளையும் கட்டாயம் கடைபிடித்தே ஆக வேண்டும்.”
“இது தொடர்பாக, விமான நிலையங்களை தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளோம். விமான நிலையங்களுக்கான பாதுகாப்பு அளவீடுகள், பராமரிப்பு நடைமுறைகளை அந்தந்த விமான நிலைய நிர்வாகம் தொடர்ந்து செய்து வரவேண்டும். ஏர் ஆசியா விமானம், ஜூலை 17-ம் தேதி, தாமதப்பட்டது தொடர்பாக அதிகாரப்பூர்வ புகார்கள் இதுவரை வரவில்லை. எனினும், இது தொடர்பாகவும், மற்ற விவகாரங்கள் பற்றியும் எம்ஏஎச்பியிடம் விளக்கம் கேட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.
கேஎல்ஐஏ 2-ன் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பற்றி தொடர்ந்து, ஏர் ஆசியா குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்த நிலையில், சிவில் விமான போக்குவரத்துத் துறையே தற்போது இந்த விவகாரங்களில் தலையிடத் துவங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.