Home உலகம் இலங்கைத் தேர்தலில் வன்முறைக்கு வாய்ப்பு: அமெரிக்க அரசு எச்சரிக்கை!

இலங்கைத் தேர்தலில் வன்முறைக்கு வாய்ப்பு: அமெரிக்க அரசு எச்சரிக்கை!

573
0
SHARE
Ad

Rajapakse_jpg_2423212fஅமெரிக்கா, ஆகஸ்ட் 10- இலங்கையில் வரும் 17-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இலங்கையிலுள்ள அமெரிக்கக் குடிமக்களுக்கும் இலங்கை செல்லும் அமெரிக்கர்களுக்கும் ஒபாமா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இத்தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்சே இலங்கை சுதந்திரக் கட்சி சார்பில் பிரதமர் பதவிக்குப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்துத் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே போட்டியிடுகிறார். இருவருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது.

இதில் ரணில்விக்கிரமசிங்கே தான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக வருவார் எனக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

மேலும், ராஜபக்சே மீண்டும் அரசியலில் தலையெடுப்பதை விரும்பாத அதிபர் சிறிசேனா ராஜபக்சேவுக்கு வெளிப்படையாகவே எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் உள்ள ராஜபக்சே எப்படியேனும் வெற்றி பெற்றுப் பிதரமராக வந்து விட வேண்டும் என்கிற வெறியோடு தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

எனவே, மிகப் பெரிய போட்டி நிலவும் இத்தேர்தலில் வன்முறை நடைபெற அதிகம் வாய்ப்பிருக்கிறது.

ஏற்கனவே, நிதியமைச்சர் பங்கேற்ற பிரசாரத்தின் போது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு பெண் இறந்து போனார். பலர் படுகாயமுற்றனர். இதுபோல் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 15 நாட்களில் 4 அரசியல் கொலைகள் நடந்துள்ளன.

இந்தச் சம்பவங்களை எல்லாம் சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்க அரசு, நிழல் உலகத் தாதாக்களுடன் அரசியல் தலைவர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளது. எனவே, இலங்கையிலுள்ள அமெரிக்கக் குடிமக்களுக்கும் இலங்கை செல்லும் அமெரிக்கர்களுக்கும் எச்சரிகையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்படி ஒபாமா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.