Home இந்தியா ஏர் இந்தியா விமானத்தைக் கடத்தித் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி!

ஏர் இந்தியா விமானத்தைக் கடத்தித் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி!

690
0
SHARE
Ad

air india flightபுதுடில்லி, ஆகஸ்ட் 14- சுதந்திர தினத்தைச் சீர்குலைக்குக் நோக்கில் ஏர்இந்தியா விமானங்களைக் கடத்தித் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகளும்,அதன் நட்பு அமைப்பான இந்திய முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பும் இந்தியச் சுதந்திர தின விழாவைக் குறி வைத்துப் பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட அதிக சாத்தியக் கூறுகள் உள்ளன என்று உளவுத்துறை  தெரிவித்துள்ளது.

மும்பையில் 2008-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைப் போல் கடல் வழியாகவோ அல்லது வான் வழியாகவோ தாக்கக் கூடும் என்பதால், பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என உளவுத்துறையும், உள்துறை அமைச்சகமும் வலியுறுத்தியுள்ளன.

#TamilSchoolmychoice

இதனால், இந்தியாவில் உள்ள அனைத்துக் கடற்பகுதிகளிலும், அனைத்து விமான நிலையங்களிலும் 7 அடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டு, காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.