Home 13வது பொதுத் தேர்தல் எதிர்க்கட்சிகளின் பொதுத் தேர்தல் நிதி திரட்டும் விழா

எதிர்க்கட்சிகளின் பொதுத் தேர்தல் நிதி திரட்டும் விழா

1125
0
SHARE
Ad

ஜனவரி 7 – எதிர்க்கட்சிகளின் சார்பாக பொதுத் தேர்தல் நிதி திரட்டும் விழா எதிர்வரும் ஜனவரி 10ஆம் தேதி தலைநகர் சீ பூத்தே பகுதியில் உள்ள தியான் ஹாவ் சீன ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நுருல் இசா அன்வார் (கலந்து சிறப்பிப்பார். அவருடன் எதிர்க்கட்சி தலைவர்களான டாக்டர் சுல்கிப்ளி அமாட், பத்து நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் தியான் சுவா, ஜனநாயக செயல்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா ஆகியோரும், பாடாங் செராய் நாடாளுமன்ற தொகுதியில் பிகேஆர் கட்சியின் சார்பாக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுபவருமான என்.சுரேந்திரனும் கலந்து சிறப்பிப்பார்கள்.

இந்நிகழ்வுக்கு “மேலும் சிறப்பான மலேசியாவை நோக்கி” என்று தலைப்பு சூட்டப்பட்டிருக்கின்றது.

#TamilSchoolmychoice