Home Featured நாடு 24 சடலங்களுடன் இன்னொரு புதைகுழி கண்டறியப்பட்டது!

24 சடலங்களுடன் இன்னொரு புதைகுழி கண்டறியப்பட்டது!

642
0
SHARE
Ad

Mass graveகோலாலம்பூர் – கடந்த சனிக்கிழமை தாய்லாந்து எல்லை அருகே மீண்டும் ஒரு மிகப் பெரிய புதைகுழி ஒன்றை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

அந்தப் புதைகுழியில் மனிதக்கடத்தலுக்கு உள்ளானதாக நம்பப்படும் சுமார் 24 பேரின் சடலங்களையும் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

மலேசிய – தாய்லாந்து எல்லையான புக்கிட் வாங் பர்மா என்ற இடத்தில் சனிக்கிழமை புதைகுழி ஒன்றில் இருந்து இந்த 24 சடலங்களை மீட்ட அதிகாரிகள் அது குறித்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#TamilSchoolmychoice

அந்த 24 பேரும் ரோஹின்யா மக்களாக இருக்குமா? என்பது குறித்து உடனடியாக தெரியாத நிலையில், வங்காளதேசம், மியான்மார் ஆகிய நாடுகளில் இருந்து மனிதக் கடத்தல்காரர்களால் அழைத்து வரப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களாகவும் இருக்கலாம் என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.