Home உலகம் இங்கிலாந்து விமான கண்காட்சியில் பெரும் விபத்து – 11 பேர் பலி! (காணொளி)

இங்கிலாந்து விமான கண்காட்சியில் பெரும் விபத்து – 11 பேர் பலி! (காணொளி)

646
0
SHARE
Ad

englandஷோர்ஹம் – இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஷோர்ஹம் விமான கண்காட்சி போது, விமானம் ஒன்று விபத்திற்குள்ளாகி 11 பேர் பலியாகி உள்ளனர். 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இங்கிலாந்தின் தென் கிழக்குப் பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் விமான சாகசங்களுக்கான ஷோர்ஹம் கண்காட்சி கடந்த சனிக்கிழமை தொடங்கியது. பைட்டர் ஜெட் விமானங்களைக் கொண்டு விமானிகள் பல்வேறு சாகசங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தனர்.

அப்போது, பைட்டர் ஜெட் விமானம் ஒன்று, விமானியின் கட்டுப்பாட்டை இழந்து வாகனங்களுக்கான சாலையில் விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் இதுவரை 11 பேர் பலியாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

எனினும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை. படுகாயமடைந்தவர்களில் சிலரின் நிலை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வானுயர பறந்த அந்த விமானம், விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழும் காட்சி ஒருவரால் படம் பிடிக்கப்பட்டுள்ளது. அந்த காணொளியைக் கீழே காண்க: