Home Featured நாடு பெர்சே 4.0 பேரணியால் நஜிப்பை பதவியிலிருந்து இறக்க முடியாது – காதிர் ஜாசின் கருத்து

பெர்சே 4.0 பேரணியால் நஜிப்பை பதவியிலிருந்து இறக்க முடியாது – காதிர் ஜாசின் கருத்து

638
0
SHARE
Ad

kadir_jasinகோலாலம்பூர் – நாடாளுமன்றத்தாலோ அல்லது மக்களாளோ டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை பிரதமர் பதவியிலிருந்து இறக்கி விட முடியாது என்று மூத்த பத்திரிக்கையாளரான ஏ.காதிர் ஜாசின் தெரிவித்துள்ளார்.

இந்த வார இறுதியில் மிகப் பெரிய அளவில் பெர்சே பேரணி நடைபெற்றாலும் கூட, நஜிப் பதவி விலகுவது சாத்தியமாகாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நஜிப்பைக் கவிழ்ப்பது மட்டுமே பெர்சேவின் நோக்கம் என்றால், அது நிச்சயம் நிறைவேறாது. ஆர்ப்பாட்டங்கள், தெருப் போராட்டங்களால், நஜிப்பை மாற்ற முடியாது. என்ன தான் அவர்கள் வெயிலில் காய்ந்து, வியர்வை வழியப் போராட்டம் நடத்தினாலும் நஜிப் பதவி விலகமாட்டார்” என்று காதிரி ஜாசின் நேற்று இரவு மலேசியாகினி ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice