Home இந்தியா சோனியாவிற்கு எதிராகச் சீக்கியர்கள் தொடர்ந்த வழக்கு: அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி!

சோனியாவிற்கு எதிராகச் சீக்கியர்கள் தொடர்ந்த வழக்கு: அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி!

519
0
SHARE
Ad

Tamil-Daily-News-Paper_87713259459நியூயார்க் – அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக அமெரிக்க வாழ் சீக்கியர்கள் தொடர்ந்த வழக்கை அமெரிக்க நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984–ஆம் ஆண்டு சீக்கியப் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் கலவரம் வெடித்தது.

இதில் 3325 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்; ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்; அவர்களுக்குச் சொந்தமான பல நூறு கோடி  ரூபாய் மதிப்புள்ள உடைமைகள் சூறையாடி சேதப்படுத்தப்பட்டன.

#TamilSchoolmychoice

சீக்கியர்களுக்கு எதிரான இந்தச் சம்பவம் நிகழ்ந்து சுமார் 30 ஆண்டுகள் கழிந்த  நிலையில், அமெரிக்காவில் உள்ள ‘சீக்கியர்களுக்கான நீதி’ என்ற மனித உரிமை அமைப்பினர் மற்றும் அந்த கலவரங்களினால்  பாதிக்கப்பட்டுth தற்போது அமெரிக்காவில் வாழும் இருவர் இணைந்து  1984-ஆம் ஆண்டு  நிகழ்ந்த கலவரத்தின் போது சீக்கியர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்குக் காங்கிரஸ்  தலைவர் சோனியா காந்தி இழப்பீடு வழங்க வேண்டும்’ என நியூயார்க் கிழக்கு  மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

மேலும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, பாதிக்கப்பட்ட சீக்கியர்களுக்கு உரிய நீதி கிடைக்க  உதவுமாறு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கும் அந்த அமைப்பினர் கடிதம்  அனுப்பினர்.

மேலும், இந்தத் தாக்குதல் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டி, இதனால் சீக்கியர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் நேர்ந்தன என்கிற புள்ளிவிவரங்களையும் ஒரு தொகுப்பாகத் தயாரித்து,  ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனிடம் வழங்கினர்.

இந்நிலையில், சோனியா காந்திக்கு எதிரான இந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, வழக்கில் உள்ள அனைத்துச் சம்பவங்களும் அமெரிக்காவுக்கு வெளியே நடந்தவை; எனவே,  இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி தள்ளுபடி செய்தது.