Home இந்தியா மும்பை ரிசர்வ் வங்கியில் இன்று பயங்கரத் தீ விபத்து!

மும்பை ரிசர்வ் வங்கியில் இன்று பயங்கரத் தீ விபத்து!

602
0
SHARE
Ad

02-1433241417-2-mumbaistocks-600மும்பை – மும்பை பந்த்-குர்லா வளாகத்தில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் 4-ஆவது தளத்தில் இன்று காலை 8.30 மணி அளவில் திடீரெனப் பயங்கரத்  தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து உடனடியாகத் தீயணைப்பு நிலையத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து  15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட போராட்டத்திற்குப் பின்பு தீயை அணைத்தனர்.

#TamilSchoolmychoice

இந்தத் திடீர் தீ விபத்துக்கான  காரணம் குறித்துக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தீ விபத்தில் உயிர்ப் பலி ஏதும் ஏற்படவில்லை. பொருட்சேதங்கள் பற்றிய முழு விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.