Home உலகம் ஜப்பானில் கொட்டித் தீர்க்கும் மழை – டோக்கியோவின் வட பகுதியில் வெள்ளப்பெருக்கு!

ஜப்பானில் கொட்டித் தீர்க்கும் மழை – டோக்கியோவின் வட பகுதியில் வெள்ளப்பெருக்கு!

444
0
SHARE
Ad

japan1டோக்கியோ – ஜப்பானில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்துவருவதால் பெரும்பாலான இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. குறிப்பாக டோக்கியோவின் வட பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

japanஅங்கிருந்த பெரும்பான்மையான மக்கள், இராணுவத்தினரின் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பலரை மீட்புப்படையினர் இராணுவ ஹெலிக்காப்டர் மூலம் மீட்டு வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

japnவட டோக்கியோவின் கினுகவா ஆற்றில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் மிகப் பெரிய அளவில் சேதாரங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், இதுவரை சேதாரங்கள் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.