Home உலகம் நம் மூதாதையரின் படிமங்கள் கண்டுபிடிப்பு – பரிணாம வளர்ச்சிக்கான ஆராய்ச்சியில் புதிய மைல்கல்!

நம் மூதாதையரின் படிமங்கள் கண்டுபிடிப்பு – பரிணாம வளர்ச்சிக்கான ஆராய்ச்சியில் புதிய மைல்கல்!

739
0
SHARE
Ad

manஜோகன்னஸ்பர்க் – தென் ஆப்பிரிக்காவின் குகைப் பகுதியில் இருந்து சுமார் 3 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நமது மூதாதையரின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பரிணாம வளர்ச்சி தொடர்பாக நடைபெற்று வரும் ஆராய்ச்சியில், இந்த கண்டுபிடிப்பு புதிய மைல்கல்லாக இருக்கும் என்று பாராட்டப்பட்டு வருகிறது.

man1ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள விட்வாடர்ஸ்ரேண்ட் பல்கலைகழகத்தின் (Witwatersrand University) பேராசிரியரும், அமெரிக்காவைச் சேர்ந்த படிமமானுடவியலாளருமான (Paleoanthropologist) லீ பெர்கரின் தலைமையில் 60 ஆய்வாளர்கள், ஆப்பிரிக்க குகைகளில் சிதைந்து போன 15 எலும்புக் கூடுகளை கண்டறிந்தனர்.

man3அதனைத் தொடர்ந்து மேலும் நீண்ட அந்த ஆராய்ச்சியில் தான், மூதாதையரின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. தற்சமயம் அந்த படிமங்களுக்கு நாலெடி என பெயரிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

man2இது தொடர்பாக பேராசிரியர் லீ பெர்கர் கூறுகையில், “இந்த புதிய கண்டுபிடிப்பு நம் மூதாதையர் பற்றிய ஆராய்ச்சியில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இது போன்ற ஒன்றை நான் எனது 25 வருட கால ஆராய்ச்சியில் பார்த்ததில்லை.”

“நாலெடியின் படிமங்கள் மனிதனை ஒத்து இருந்தாலும் பல்வேறு இடங்களில் மாறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக, மண்டை ஓடு மனிதனை ஒத்து இருந்தாலும், மூளை நமது மூளையை விட சிறியதாக உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.