Home Featured நாடு ஹரிமாவ் மலேசியா அணியின் பயிற்சியாளராக ராஜகோபால் நியமனம்!

ஹரிமாவ் மலேசியா அணியின் பயிற்சியாளராக ராஜகோபால் நியமனம்!

551
0
SHARE
Ad

Rajagopalகூச்சிங் – சரவாக் காற்பந்தாட்டக் குழுவின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் தேசியப் பயிற்சியாளர் டத்தோ கே.ராஜகோபால் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்து நடக்கவிருக்கும் காற்பந்தாட்டப் போட்டிகளுக்கு அவர் பயிற்சியாளராக செயல்படுவார் என சரவாக் காற்பந்தாட்ட சங்கம் நேற்று அறிவித்தது.

59 வயதான ராஜகோபால், கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை ஹரிமாவ் மலேசியா குழுவுக்குப் பயிற்சியாளராகப் பொறுப்பு வகித்தார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், வரும் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கும் 2016 -ம் ஆண்டு மலேசியா சூப்பர் லீக் ஆட்டங்களுக்கு முந்தைய சீசன் ஆட்டங்களில் இருந்து ராஜகோபால் பயிற்சியாளராகப் பொறுப்பேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வரும் சனிக்கிழமை தொடங்கும் சரவாக் 2015 மலேசியா கோப்பை ஆட்டத்தில் ராஜகோபால் பொறுப்பு வகிக்கமாட்டார். மாறாக, குழுவினர் வலிமையைப் பெற பிரச்சாரம் செய்வார் என்றும் காற்பந்தாட்ட சங்கம் அறிவித்துள்ளது.