Home உலகம் ஜப்பானில் வரலாறு காணாத மழை: 1,70,000 பேர் வெளியேற்றம்!

ஜப்பானில் வரலாறு காணாத மழை: 1,70,000 பேர் வெளியேற்றம்!

628
0
SHARE
Ad

150910084034_japan_floods_roof_evn_640x360_evn_nocreditடோக்கியோ – கிழக்கு ஜப்பானைக் கடந்து சென்ற ‘எட்டௌ’ என்ற சூறாவளியால் ஜப்பானில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

டோக்கியோவுக்கு வடக்கே ஓடு கினுகவா நதி பெருக்கெடுத்து ஜோசோ என்ற நகரம் முழுதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வெள்ளத்தில் பல கட்டடங்கள் மிகுந்த சேதமடைந்துள்ளன. முக்கியமாக இபரக்கி மற்றும் டொச்சிகி ஆகிய நகரக் கட்டமைப்புக்கள் அடையாளம் தெரியாதளவு சேதமடைந்துள்ளன.

#TamilSchoolmychoice

மக்கள் தங்களது உயிரைக் காத்துக் கொள்ள வீட்டின் கூரை மேல் ஏறி நின்று கொண்டனர். அவர்கள் ராணுவ ஹாலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

இதுவரை 1,70, 000 இற்கும் அதிகமான மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதுடன் மீட்புப் பணியில் இராணுவ ஹெலிகாப்டர்களும் படகுகளும் உபயோகப் படுத்தப்பட்டு வருகின்றன.

2011 சுனாமியால் பாதிக்கப் பட்ட ஃபுக்குஷிமா உலைப் பகுதியிலும் கனமழை பெய்துள்ளதால் தண்ணீர் வெளியேறும் வழிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது.

இக்கனமழை காரணமாகக் கிழக்கு ஜப்பானின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டும் உள்ளது. மேலும் விமான ரயில் சேவைகள் பலவும் ரத்து செய்யப் பட்டும் சில முக்கியமான சாலைகள் மூடப்பட்டும் உள்ளன.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, “இதற்கு முன் இதுபோல் ஜப்பானில் கனமழை பெய்ததே இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.