Home Featured இந்தியா ஜபுவா உணவக வெடி விபத்து – பலி எண்ணிக்கை 104 ஆக உயர்வு!

ஜபுவா உணவக வெடி விபத்து – பலி எண்ணிக்கை 104 ஆக உயர்வு!

663
0
SHARE
Ad

MP2ஜபுவா – மத்திய பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்தில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று சமையல் எரிவாயு உருளை வெடித்துச் சிதறிய சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. 150-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

12-Jhabuaஇந்நிலையில், வெடி விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் வெளியாகி உள்ளன. உணவகம் இருந்த இடத்திற்கு அருகே ராஜேந்திர கசாவா என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு சொந்தமான குடியிருப்பு பகுதியில், இரண்டு கடைகளும் உள்ளன. கசாவா பாறைகளை தகர்ப்பதற்குத் தேவையான வெடி மருந்துகளை சேமித்து வைக்கும் உரிமம் பெற்றவர். இவர் தனது குடியிருப்பு பகுதியில் தான், அந்த வெடி மருந்துகளை வைத்திருந்திருக்கிறார். அப்போது தான் எதிர்பாராத விதமாக இந்த வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.

Cylinder-blast-in-MP_PTIஇது தொடர்பாக மத்திய பிரதேச காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த குடியிருப்பு பகுதிகளிலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி, ஜபுவா உணவக வெடி விபத்தில் பலியானோருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.