Home கலை உலகம் ரஜினியின் பிறந்த நாளன்று ‘எந்திரன் 2 ‘படத்தை ஆரம்பிக்க ஷங்கர் திட்டம்!

ரஜினியின் பிறந்த நாளன்று ‘எந்திரன் 2 ‘படத்தை ஆரம்பிக்க ஷங்கர் திட்டம்!

634
0
SHARE
Ad

rajini-shankar5 (1)சென்னை – ரஜினிகாந்த் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘எந்திரன்–2’ படத்தை டிசம்பர் மாதம் ரஜினியின் பிறந்த நாளன்று ஆரம்பிக்கத் திட்டமிட்டிருக்கிறார் ஷங்கர். அதற்காக ரஜினியின் பிறந்த நாளை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கிறார்.

‘எந்திரன்’ படத்தை விட ‘எந்திரன்-2’ இன்னும் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பது ஷங்கரின் ஆசை.ஆகையால் சின்ன சின்ன விசயங்களில் கூட அதிகக் கவனம் செலுத்தி வருகிறார். ‌ஷங்கர்.

இதற்காகவே பாலிவுட்டிலிருந்து தொழில்நுட்பக் கலைஞர்களை வரவழைத்துப் படத்தில் இடம்பெறும் தொழில்நுட்பங்கள் குறித்துப்  பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

#TamilSchoolmychoice

ரஜினியுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தமிழில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலிருந்தும் வரவழைக்கப்பட உள்ளனர்.

ரஜினிக்கு வில்லனாக நடிக்க விக்ரம் மறுத்துவிட்டதால், அதற்குப் பொருத்தமான நடிகரைத் தேடிக் கொண்டிருக்கிறார்.

ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே அல்லது கத்ரீனா கைப் இருவரில் யாராவது ஒருவர் நடிப்பது உறுதி.

ரஜினியின் பிறந்த நாளன்று ஆரம்பிக்கப்படும் படம், கிட்டத்தட்ட ஓராண்டு காலம் கழித்து அடுத்த பிறந்த நாளன்று வெளியிடத் திட்டமிட்டுள்ளார் ஷங்கர்,

தற்போது ‘கபாலி’ படப்பிடிப்புக்குத் தயாராகி வரும் ரஜினிகாந்த், ஒரே சமயத்தில் இரண்டு படத்திலும் மாறிமாறிக் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.