Home Featured நாடு சிவப்புப் பேரணி: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்! (தொகுப்பு 4)

சிவப்புப் பேரணி: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்! (தொகுப்பு 4)

692
0
SHARE
Ad

 

red shirt-rally-petaling-street-16 sep 2015

  • பெட்டாலிங் சாலையில் சிவப்புப் பேரணியினரை தடுத்து நிறுத்த மிகக் குறைந்த அளவு பலத்தையே காவல் துறை பயன்படுத்தியது – காவல் துறை அதிகாரி விளக்கம்
  • பெட்டாலிங் சாலையில் சிவப்புப் பேரணியினரின் கலவரத்தை விசாரிக்க வேண்டும் – பிரதமர் நஜிப் உத்தரவு
  • பெட்டாலிங் சாலை வணிகர்களுக்கு எதிராக உள்நாட்டு வாணிப, பயனீட்டாளர் அமைச்சுக்கு புகார் செய்வோம் – மலாய் முஸ்லீம் அரசு சார்பற்ற இயக்கங்களின் தலைவர் டத்தோ ஜமால் யூனுஸ் சிவப்புப் பேரணியினரிடையே உரை!
  • சிவப்புப் பேரணியில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரம் என காவல் துறையினர் கணிப்பு
  • பாஸ் கட்சி சிதறிக் கிடப்பதற்கு ஜசெகவின் தலையீடுதான் காரணம் என சிவப்புப் பேரணியினரிடையே உரையாற்றும் போது பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி குற்றச்சாட்டு
  • சிவப்புப் பேரணி நடந்த வேளையில், மாலை 4.00 மணியளவில் முன்னாள் பிரதமர் மகாதீரின் மகள் மரினா மகாதீருடன் இணைந்து சுமார் 15 பேர் கோலாலம்பூர் இரட்டைக் கோபுர வளாகத்தில் உள்ள பூங்காவில், ‘பல இன’ முகம் காட்டும் கூட்டம் நடத்தினர்!
  • பாடாங் மெர்போக்கில் மாலை 6.00 மணிவரை சிவப்புப் பேரணி என அறிவிக்கப்பட்டிருந்தாலும் மாலை 4.30 மணி முதற்கொண்டே பங்கேற்பாளர்கள் தங்களின் பேருந்துகளுக்குத் திரும்பி, சொந்த ஊர்களுக்குச் செல்லத் தொடங்கினர்
  • மாலை 5.00 மணியளவில் பெட்டாலிங் சாலையிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு காவல் துறையினர் இறுதி எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து காவல் துறையினரை நோக்கி பிளாஸ்டிக் குடுவைகள் (பாட்டில்கள்) எறியப்பட்டன – சீனர்களின் எடுபிடிகள் என காவல் துறையினரை நோக்கி தகாத வார்த்தைகள் கூறப்பட்டன!
  • மாலை 5.00 மணியளவில் பெட்டாலிங் சாலையில் மறியலில் ஈடுபட்ட சிவப்புச் சட்டைக்காரர்களைக் கலைக்க காவல் துறை இராசயனம் கலந்த தண்ணீர் பாய்ச்சினர்.