Home Featured உலகம் இலங்கை ராணுவம் தமிழ்ப் பெண்களை கொடூரமாக சீரழித்துள்ளது – ஐநா அறிக்கை உறுதிப்படுத்தியது!

இலங்கை ராணுவம் தமிழ்ப் பெண்களை கொடூரமாக சீரழித்துள்ளது – ஐநா அறிக்கை உறுதிப்படுத்தியது!

1021
0
SHARE
Ad

ஜெனீவா- இலங்கை ராணுவத்தினர் தமிழ்ப் பெண்களை மிகக் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்துள்ளதாக ஐ.நா. மனித உரிமை ஆணைய அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பாலியல் பலாத்காரங்களை ஒரு தண்டனை முறையாக ராணுவத்தினர் பின்பற்றியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

warcrime_08

#TamilSchoolmychoice

இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை அறிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்துலக தமிழ்ச் சமுதாயத்தை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இலங்கை ராணுவ வீரர்கள், தங்களால் கைது செய்யப்படும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு எதிராக பலாத்காரங்களில் ஈடுபட்டதாக அறிக்கை கூறுகிறது. குறிப்பாக, இறுதிக்கட்ட போர் முடிந்த பிறகு, இலங்கை ராணுவத்தினர் அதிக பாலியல் குற்றங்களில் ஈடுட்டது தெரியவந்துள்ளது.

“விடுதலைப் புலிகளோடு தொடர்புள்ளவர்கள் என்று தெரிந்தால் அந்த மக்களை அசிங்கப்படுத்தும் ஒரு முயற்சியாக பலாத்காரங்களை ராணுவம் கையில் எடுத்துள்ளது. அச்சம், வெட்கம் போன்ற காரணங்களால், பாதிக்கப்பட்டோர் தங்களது பாதிப்பு குறித்த முழு விவரத்தையும் தெரிவிக்காததால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை முழுமையாகக் கண்டறிய முடியவில்லை. ஆனால் பெருமளவில் இக்குற்றங்கள் நடந்துள்ளன என்பது புரிகிறது,” என்று ஐ.நா., அறிக்கை தெரிவிக்கிறது.

அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களை மீறி இலங்கை ராணுவத்தினர் பாலியல் பலாத்காரங்களில் ஈடுபட்டதாகவும், அவற்றுள் சில பலாத்காரங்கள் மனித குலத்திற்கு எதிரான வகையில் மிக மோசமாக இருந்துள்ளன என்றும் ஐ.நா., அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.