கோலாலம்பூர்- கடந்த புதன்கிழமை அன்று நடைபெற்ற சிவப்புச் சட்டை பேரணியின் போது குவிந்த குப்பைகளை அகற்ற 38 ஆயிரம் ரிங்கிட் செலவாகியுள்ளது.
இத்தகவலை நல்வாழ்வு, வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி அமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ரஹ்மான் டாலான் நேற்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், குப்பைகளை அகற்றுவதற்கான செலவை செஞ்சட்டை பேரணி ஏற்பாட்டாளர்கள் ஏற்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பேரணியால் குவிந்த குப்பைகளை அகற்ற 38 ஆயிரம் வெள்ளி செலவானதாக ஆலம் ஃப்ளோரா தெரிவித்துள்ளது. சற்று முன்னர் தான் அத்தகவலைப் பெற்றேன். இந்த விவரம் செஞ்சட்டை பேரணி ஏற்பாட்டாளர்களுக்கு தெரியப்படுத்தப்படும்” என்று அப்துல் ரஹ்மான் தமது பதிவில் மேலும் கூறியுள்ளார்.