Home நாடு பக்காத்தான் பிரதமர் வேட்பாளராக மகாதீர்: ஆளுங்கட்சித் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

பக்காத்தான் பிரதமர் வேட்பாளராக மகாதீர்: ஆளுங்கட்சித் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

1442
0
SHARE
Ad

Mahathir (500x333)கோலாலம்பூர் – பக்காத்தான் ஹராப்பானின் பிரதமர் வேட்பாளராக பெர்சாத்து கட்சியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டார்.

துணைப் பிரதமர் வேட்பாளராக பிகேஆர் தலைவர் டத்தின்ஸ்ரீ வான் அசிசா அறிவிக்கப்பட்டார். மகாதீரின் தேர்வு குறித்து ஒரு சில எதிர்கட்சித் தலைவர்கள் மத்தியில் அதிருப்திகள் இருந்தாலும் கூட அது வெளியே தெரியாத அளவிற்கு சமரசப் பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன.

என்றாலும், மறைந்த ஜசெக தலைவர் கர்பால் சிங்கின் மகள் சங்கீத் கவுர் டியோ, மகாதீரின் தேர்வு குறித்து வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

அவரைத் தொடர்ந்து சிலாங்கூர் பிகேஆரிலும் சில சலசலப்புகள் எழுந்திருப்பதாகத் தகவல்கல் கூறுகின்றன.

இந்நிலையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த தலைவர் மகாதீரின் தேர்வு குறித்து என்ன சொல்கிறார்கள்?

தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் சாலே சையத் கெருவாக்:

SALLEH-SAID-KERUAK-L“மகாதீரைத் தவிர வேறு ஒருவரைத் தேர்வு செய்ய இயலாத நிலையில் தான் பக்காத்தான் இருக்கிறது. வேறு ஒருவரைத் தேர்வு செய்திருந்தால் அது தற்கொலைக்குச் சமம். 24 மணி நேரத்தில் பக்காத்தான் சிதைந்திருக்கும்” என சாலே தனது வலைத்தளத்தில் கூறியிருக்கிறார்.

பிரதமர் துறை அமைச்சர் அசலினா ஒத்மான்:

“நான் பலமுறை கூறியிருக்கிறேன். பக்காத்தான் ஹராப்பான் என்பது ஒரு மறுசுழற்சி கட்சி. காரணம், தகுதிவாய்ந்த இளம் தலைவர்கள் இருந்தும் அவர்கள் முன்னாள் அம்னோ தலைவர்களையெல்லாம் மறுசுழற்சி செய்து பயன்படுத்துகிறார்கள்”

Azalina“எனவே, ஒன்று தங்களின் இளம் தலைவர்கள் மீது பக்காத்தானுக்கு நம்பிக்கை இல்லை அல்லது தகுதிவாய்ந்த தலைவர்களே இல்லை. அதனால் தான் முன்னாள் அம்னோ தலைவர்களைப் பயன்படுத்துகிறார்கள்” என அசலினா தெரிவித்திருக்கிறார்.

தேசிய முன்னணி வியூக தொலைத்தொடர்புக் குழுவின் தலைவர் அப்துல் ரஹ்மான் டாலான்:

“இது ஒரு மோசமான வியூகம். அடுத்த பிரதமராக மகாதீரை நியமித்து அவரிடம் உருமாற்றத்தை கொண்டு வர எதிர்பார்க்கும் ஹராப்பானின் வியூகம் கேலிக்குறியதாக இருக்கிறது”

Datuk-Abdul-Rahman-Dahlan-565x376“உண்மை என்னவென்றால், மகாதீர் அப்படிப்பட்ட உருமாற்றத்தைக் கொண்டு வரமாட்டார். ஏமாற்றுவதில் தான் ஒரு நிபுணர் மற்றும் பயனற்ற சீர்திருத்தவாதி என்பதை அவர் நிரூபித்துவிட்டார்”

“தாங்களே தங்களுக்கு ஒரு பேரிடரை ஏற்படுத்தி விட்டார்கள். மலேசியாவின் மிக மோசமான ஊழல் பேர்வழியை ஹராப்பான் தேர்வு செய்திருக்கிறது. என்ன ஒரு அசிங்கம்” என அப்துல் ரஹ்மான் டாலான் தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.

மஇகா பொருளாளர் டத்தோஸ்ரீ எஸ்.வேள்பாரி:

Vell Paari “எதிர்கட்சிக் கூட்டணி தற்போது டாக்டர் மகாதீரைத் தவிர வேறு வேட்பாளரைத் தேர்வு செய்ய முடியாத அளவிற்கு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார்கள் என நினைக்கிறேன்”
“அன்வார் துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு 1998-ம் ஆண்டு கெடிலானின் தீவிரமான ஆதரவாளர்கள் கொண்டு வந்த மறுசீரமைப்பு இயக்கத்திற்காக அவர்களில் சில கைது செய்யப்பட்டார்கள், சிலர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அன்வாரை விடுதலை செய்ய அவர்கள் எடுத்த அத்தனை முயற்சிகளும், போராட்டங்களும் தற்போது வீணாகிவிட்டது போல் தெரிகிறது” என்று வேள்பாரி தெரிவித்திருக்கிறார்.
மேலும் எதிர்கட்சியிலுள்ள இளம் தலைவர்களுக்கு வேள்பாரி கூறியிருக்கும் தகவலில்,
“மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள், டாக்டர் மகாதீருடன் உடன்பாடு இல்லாத காரணத்தால் தான் எதிர்கட்சியில் இணைந்தீர்கள். குறிப்பாக சீர்திருத்த இயக்கத்திற்குப் பின்னர். இப்போது அவர் தான் உங்கள் தலைவர். வாழ்க்கை சில நேரங்களில் மிகக் கொடூரமானது” என்றும் வேள்பாரி கூறியிருக்கிறார்.
– செல்லியல் தொகுப்பு