Home கலை உலகம் எந்திரன் 2 படத்தின் முதற்கட்ட பணிகளைத் தொடங்கினார் ஷங்கர்!

எந்திரன் 2 படத்தின் முதற்கட்ட பணிகளைத் தொடங்கினார் ஷங்கர்!

608
0
SHARE
Ad

20-1442747695-shankar-45சென்னை – எந்திரன் 2 படத்தின் முன்னோட்ட வேலைகளைத் தொடங்கிவிட்டார் இயக்குநர் ஷங்கர்.

VFXல் நிபுணரான ஸ்ரீநிவாஸ் மோகனுடன் இணைந்து படத்தின் முதற்கட்ட பணிகளை மேற்கொண்டார் ஷங்கர்.

ரஜினியின் பிறந்த நாளன்று எந்திரன் 2 படத்தின் தொடக்கவிழா நடைபெற உள்ளது.அதைத் தொடர்ந்து படப்பிடிப்பைத் தொடர்ச்சியாக நடத்தி, 2017-ஆம் ஆண்டு பொங்கலன்று படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

#TamilSchoolmychoice

தற்போது ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் கபாலி படம் 2016-ஆம் ஆண்டு பொங்கலன்று வெளியாகவிருக்கிறது. அதனையடுத்து 2017-ஆம் ஆண்டு பொங்கலுக்கு எந்திரன் 2 படம் வெளியாகும்.