Home உலகம் போரின் நாயகன் ராஜபக்சே; அவரை அனைத்துலக விசாரணைக்கு உட்படுத்த முடியாது!

போரின் நாயகன் ராஜபக்சே; அவரை அனைத்துலக விசாரணைக்கு உட்படுத்த முடியாது!

820
0
SHARE
Ad

6-7-2011-27-mahinda-rajapakse-challenges-tகொழும்பு – “ராஜபக்சேவைப் போர் நாயகனாக மக்கள் கருதுவதால்,அவரை அனைத்துலக விசாரணைக்கு உட்படுத்த முடியாது” என்று ஒரு நேர்காணலின் போது, இலங்கையின் மூத்த அமைச்சரும் அமைச்சரவைச் செய்தித் தொடர்பாளருமான ராஜித சேனரத்னா, ராஜபக்சேவுக்கு ஆதரவாகப் பேசிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் பேசியதாவது:

“இலங்கை மக்கள் ராஜபக்சேவைப் போர் நாயகனாகவே கருதுகிறார்கள். அதனால் தான் அவருக்கு முன்பு நாடு முழுவதும் ஆதரவு இருந்தது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

#TamilSchoolmychoice

என்னைப் பொருத்தவரை போர்க்குற்றம் என்ற ஒன்று இல்லவே இல்லை; போரே குற்றம்தான். அதனால் தான் போருக்கு எதிரானவர்களாக நாங்கள் இருக்கிறோம்.

ஆனால், சில சூழல்களில் போர் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அல்-கொய்தாவை ஒழிப்பதற்குப் போர் ஒன்றே தீர்வு என்பதை நாங்கள் ஏற்கிறோம். தலிபானை அழிப்பதிலும் போரைத் தவிர வேறு வழியில்லை. அதேபோல் விடுதலைப்புலிகள் விசயத்திலும் அதே நிலைதான் ஏற்பட்டது.

போர்க்குற்றங்கள் எல்லாம் அதிபர் ராஜபக்சேவுக்குத் தெரிந்துதான் நடந்தது என்று எப்படிச் சொல்ல முடியும்? சித்ரவதை மையங்களைச் சிலர் நடத்தியிருந்தால், அதிபர் உத்தரவிட்டுத் தான் செய்திருப்பார்கள் என்று கூறமுடியாது.

ஆகையால், எந்தவிதமான சர்வதேச விசாரணைக்கும் அவரை உட்படுத்த முடியாது. நான் ராஜபச்சேவுக்கு ஆதரவானவன் இல்லை. அவரைப் பல வகைகளில் எதிர்ப்பவன் நான். ஆனால், அவரை எந்தவிதமான சர்வதேச விசாரணைக்கும் உட்படுத்த முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்றார் அவர்.

இலங்கையில் நடந்த படுகொலைகள் பற்றி அனைத்துலக விசாரணை தேவை என்று பலர் போராடி வரும் வேளையில், இலங்கை அரசின் முக்கிய அமைச்சர் இவ்வாறு பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.