கோலாலம்பூர் – அரசாங்கத்தின் உள்துறை அமைச்சின் இடைக்காலத் தடையுத்தரவை வெற்றிகரமாக நீதிமன்றத்தில் முறியடித்த எட்ஜ் பத்திரிக்கையின் சட்டப் போராட்டம் இன்னும் முற்றுப் பெறவில்லை.
எட்ஜ் தடை உத்தரவு இரத்து செய்யப்பட்ட உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் உள்துறை அமைச்சரின் சார்பிலும், உள்துறை அமைச்சின் சார்பிலும் வழக்காடிய அரசு தரப்பு வழக்கறிஞர் அலிஸ் லோக், இதனைத் தெரிவித்துள்ளார்.
நேற்று இதற்கான முன் அறிவிப்பு ஆவணத்தை அவர் புதன்கிழமை புத்ரா ஜெயாவிலுள்ள மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் (Court of Appeal) சமர்ப்பித்தார்.
மேலும், மேல்முறையீட்டு நீதிமன்ற விசாரணை நடைபெறும் வரை, எட்ஜ் பத்திரிக்கைகள் மீதான இடைக்காலத் தடையுத்தரவு நீடிக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் உயர் நீதிமன்றத்தில் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் சமர்ப்பித்துள்ளனர்.
இதற்கிடையில் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து எட்ஜ் பத்திரிக்கை நேற்று முதல் வெளியாகத் தொடங்கியுள்ளது.