திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ரவிக்குமாரின் கட்சி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தன்னைக் கட்சியிலிருந்து நீக்கியதைக் கண்டித்தும் தீக்குளித்ததாக அவர் தலைவர் விஜயகாந்திடம் மரண வாக்குமூலம் அளித்தார்.
இது பற்றித் திண்டுக்கல் மாவட்டப் பொறுப்பாளர்களுடன் கலந்து ஆலோசனை செய்த விஜயகாந்த், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ரவிக்குமாரை பதவியில் இருந்து நீக்கினார்.
இந்நிலையில், மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கஜேந்திரபிரபு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்காகத் தேமுதிக-வினர் துக்கம் அனுசரித்து வருகின்றனர்.