Home கலை உலகம் விஷாலின் சாதியை குறிப்பிட்ட ராதிகாவிற்கு வடிவேலு பளிச் பதில்!

விஷாலின் சாதியை குறிப்பிட்ட ராதிகாவிற்கு வடிவேலு பளிச் பதில்!

1184
0
SHARE
Ad

vadielu2சென்னை – நடிகர் சங்க விவகாரம் குறித்து சமீபத்தில் பேசிய ராதிகா, நொடிக்கு ஒருமுறை விஷால் ரெட்டி என்று குறிப்பிட்டு பத்திரிக்கையாளர்களையும் சற்றே அதிர்ச்சியுறச் செய்தார். ‘பாண்டவர் அணி’ சாதியை கொண்டுவருவதாக குற்றம்சாட்டிய இவர்களே சாதி வேறுபாட்டை தூண்டும் வகையில் பேசுவதாக ஊடகங்களில் குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில் ராதிகா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடிவேலு அளித்துள்ள பேட்டியில், “அந்த அம்மா ராதிகா பேச்சுக்கு பேச்சு விஷால் ரெட்டி, விஷால் ரெட்டி என்கிறாங்க. அனைத்து மொழி நடிகர்களும் இருக்கும் இடத்தில் விஷால் ரெட்டி என்று அவர் எதற்காக கூற வேண்டும்”

Radhika“தனது பக்கத்தில் சேச்சி ஊர்வசியை வைத்துக் கொண்டு அந்த அம்மா விஷால் ரெட்டி ரெட்டிங்குறாங்க. அப்போ ரஜினிகாந்த் எதிர்த்தால் அவரை சிவாஜி ராவ் என்பீர்களா? யார் எதிர்த்தாலும் சாதியை சொல்லுவீங்களா? அந்த அம்மாவுக்கு பயம் வந்துடுச்சு. அதான் ரெட்டி ரெட்டின்னு ரொட்டி சுடுறாங்க. நாசர் சுத்த தமிழன். அவர் ஒரு முஸ்லிம் என்பதால் அவரை ஒதுக்குவார்களா?” என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் அவர், “எனக்கும் விஜயகாந்துக்கும் பிரச்சனை வந்தபோது சரத்குமார் தான் பேச்சுவார்த்தை நடத்தியதாக ராதிகா தெரிவித்துள்ளார். அவங்க ரொம்ப பொய் சொல்றாங்க. ஏன் இப்படி பிட் போடணும்” என்றும் அவர் தெரிவித்துள்ளது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.