Home Featured நாடு இன்று வெள்ளிக்கிழமை பள்ளிகள் திறப்பு: வட மாநிலங்களில் மட்டும் விடுமுறை

இன்று வெள்ளிக்கிழமை பள்ளிகள் திறப்பு: வட மாநிலங்களில் மட்டும் விடுமுறை

675
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா- வட மாநிலங்களில் உள்ள பள்ளிகளைத் தவிர, நாட்டின் பிற பகுதிகளில் வெள்ளிக்கிழமை பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், பெர்லிஸ், கெடா மற்றும் பினாங்கு மாநிலங்களில் காற்று மாசுக்குறியீட்டின் அளவு மோசமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அம்மூன்று மாநிலங்களில் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

381357-indonesia-hazeஎனினும் கெடாவில் வழக்கமாக வெள்ளிக்கிழமை விடுமுறை தினம் என்பதால், அம்மாநிலத்திற்கு இந்த உத்தரவு பொருந்தாது என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

“புகைமூட்டம் காரணமாக மொத்தம் 1600 பள்ளிகள் மூடப்படுவதால், 7 லட்சத்து 28 ஆயிரத்து 739 மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே விடுமுறை குறித்து அம்மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் விரைவில் தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட மற்றும் மாநில கல்வித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெகிரி செம்பிலான், புத்ராஜெயா, கோலாலம்பூர், பகாங்கில் உள்ள பெந்தோங், சரவாக்கில் உள்ள பெதோங், கூச்சிங், ஷ்ரீ அமான், சமாராஹான் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை பள்ளிகள் மீண்டும் இயங்கத் துவங்கும்” என்றும் கல்வி அமைச்சின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

“பள்ளியில் இருக்கும் வேளையிலும் முகக்கவசம் அணியும்படியும், உடல்நலத்தைப் பேணும்படியும் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகங்கள் அறிவுறுத்த வேண்டும்,” என கல்வியமைச்சின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

புகைமூட்டத்தால் மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே பள்ளிகள் மூடப்பட்டதாகவும் அந்த அமைச்சு விளக்கமளித்துள்ளது.

“இந்த உத்தரவானது அரசாங்கம், தனியார் பள்ளிகள் என இருதரப்புக்கும் பொருந்தும். தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை எனில் கல்வியமைச்சின் வழிகாட்டுதல்களை ஏற்றுச் செயல்பட வேண்டும் என்பதை அவர்களுக்கு நினைவூட்டுவோம்” என்றும் கல்வியமைச்சு அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.