Home Featured நாடு மகாதீர் மீதான விசாரணை நீடிக்கிறது – காலிட் அபு பக்கர்

மகாதீர் மீதான விசாரணை நீடிக்கிறது – காலிட் அபு பக்கர்

435
0
SHARE
Ad

Khalid Abu Bakarகோலாலம்பூர்-  நேரில் வரவழைத்து துன் மகாதீரிடம் விசாரணை நடத்தவில்லை என்பதற்காக, அவர் மீதான விசாரணை ஏதும் நடைபெறவில்லை எனக் கருத முடியாது என ஐஜிபி டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் கூறியுள்ளார்.

பெர்சே 4 பேரணியின் போது அம்னோ உறுப்பினர்களை விமர்சித்து வெளியிட்ட அறிக்கை தொடர்பில் துன் மகாதீர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

“அவரை (துன் மகாதீர்) நேரில் வரவழைத்து விசாரணை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக நான் கூறவே இல்லை. அவரை விசாரிப்பதற்கான நேரம் கிடைக்கவில்லை என்றுதான் கூறினேன்.”

#TamilSchoolmychoice

“அவரிடம் விசாரணை நடத்தவோ அல்லது வாக்குமூலம் பெறவோ நாங்கள் அவருக்கு அழைப்பாணை (சம்மன்) அனுப்பவில்லை என்பதற்காக, அவரைப் பற்றிய விசாரணை நடைபெறவில்லை என்று நினைத்துவிடக் கூடாது. விசாரணை நீடித்து வருகிறது. தேவைப்படும் பட்சத்தில் அவருக்கு சம்மன் அனுப்புவோம்,” என்று காலிட் அபு பக்கர் விளக்கம் அளித்துள்ளார்.

ஆகஸ்ட் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் நடைபெற்ற பெர்சே 4 பேரணியில் பங்கேற்றதற்காக துன் மகாதீர் மீதான விசாரணை நடைபெறவில்லை என்றும், அப்பேரணியின் போது அம்னோ தலைவர்களுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாகத்தான் விசாரணை நடக்கிறது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

“இது தொடர்பாக அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவதூறு ஏற்படுத்துதல் தொடர்பான குற்றவியல் சட்ட விதி 500ன் கீழ் மகாதீர் மீதான விசாரணை நடைபெறுகிறது” என்று தெரிவித்த காலிட் அபு பக்கர் விசாரணை குறித்த கூடுதல் விவரங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.