Home கலை உலகம் “ரஜினியை விட எனக்கு தமிழ் பற்று அதிகம்” – நாசர்!

“ரஜினியை விட எனக்கு தமிழ் பற்று அதிகம்” – நாசர்!

560
0
SHARE
Ad

nasser_01சென்னை – தென்னிந்திய நடிகர் சங்கத்தை, தமிழ் நடிகர் சங்கமாக மாற்ற வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்களிப்பின் போது கோரிக்கை வைத்திருந்தார்.

இது தொடர்பாக பிரபல ஊடகம் ஒன்றிற்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர் அளித்துள்ள பேட்டியில், “தமிழ் நடிகர் சங்கமாக மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை சென்ற நிர்வாகத்தினால் ஏன் நிறைவேற்ற முடியவில்லை என்று பார்க்க வேண்டும். சட்டச்சிக்கல் ஏதுமுண்டா என்று ஆராய வேண்டும். மாற்றினால் பிரச்சினைகள் எழுமா என்று அலச வேண்டும். முக்கியமாக இச்சங்கத்தின் அறுபதாண்டுக்கும் மேற்பட்ட வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.”

Rajinikanth-2இந்த தீர்மானத்தை பரபரப்பாக்கிய திரு.ரஜினிகாந்த் அவர்களை விட எனக்கு ஒரு சதவிகிதமாவது அதிக தமிழ் உணர்வு உண்டு. மெட்ராசுக்கு ஒரே இரவில் சென்னை என்று சூட்டப்படவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், இந்த தீர்மானம் தொடர்பாக ரஜினி-கமல் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளது, அவரவர் கருத்துரிமை. இருவரின் கருத்தையும் வரவேற்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.