Home Featured நாடு நஜிப் மீது நம்பிக்கை இல்லை: 13 அம்னோ கிளைகள் எதிர்ப்பு!

நஜிப் மீது நம்பிக்கை இல்லை: 13 அம்னோ கிளைகள் எதிர்ப்பு!

579
0
SHARE
Ad

NAJIBசிரம்பான்- பிரதமர் நஜிப் மீது நம்பிக்கை இழந்துவிட்டதால் அவர் அம்னோ தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என அக்கட்சியின் 13 கிளைத் தலைவர்கள் ஒரு மனதாக, ஹஃதெரிவித்துள்ளனர்.

தெலுக் கெமாங், நெகிரி செம்பிலானைச் சேர்ந்த இக்கிளைகளின் தலைவர்கள், முன்னாள் துணைப் பிரதமரும், அம்னோ துணைத் தலைவருமான டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு தங்களது ஆதரவைப் புலப்படுத்தி உள்ளனர்.

“அடுத்த பொதுத் தேர்தலில் வாக்காளர்களால் அம்னோ தண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும் எனில், கட்சித் தலைவர் பதவி விலகுவது நல்லது. கட்சியின் மரபுப்படி அடுத்த தலைவராக மொகிதீன் யாசின் பொறுப்பேற்க வேண்டும்.”

#TamilSchoolmychoice

“தனி மனிதர்களை விட கட்சியே முக்கியம் எனும் கலாச்சாரத்தை நாம் பின்பற்ற வேண்டும். தற்போதைய நிலையில் கட்சித் தலைவரை விட கட்சியே முக்கியம்” என்று தாமான் டிகேகே அம்னோ கிளையின் பேச்சாளர் கமருல் அஸ்னான் ஹபிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

குறிப்பிட்ட இந்த 13 கிளைகளும் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமோ என்று அஞ்சவில்லை என குறிப்பிட்ட அவர், ஒரு கட்சியின் அடிமட்ட தொண்டர்களே, அதன் தலைவர்களை உருவாக்குகின்றனர் என்றார். தங்களைப் போலவே பிற அம்னோ கிளைகளும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“கட்சியின் தலைவருக்கு ஏதேனும் பிரச்சினை எனில், அவர் பதவி விலக வேண்டும். இரண்டாம் இடத்தில் இருப்பவர் கட்சிக்குப் பொறுப்பேற்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரையில் துணைத் தலைவருடன் எந்தவித பிரச்சினையும் இல்லை. அதே சமயம் நஜிப் பதவி விலகினாலும் அம்னோ வலுப்பெறும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை” என்று கமருல் மேலும் தெரிவித்துள்ளார்.